மதுரையில் தொமுச நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 19 பணிமனைகளில் தொமுச நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது இதில் மதுரை மண்டல தொமுச மத்திய சங்க பொதுச் செயலாளர் பதவிக்கு மேலூர் அல்போன்ஸ் மற்றும் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 17 பதவிகளுக்கு போட்டியிட்டனர் இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால், போட்டியிட்ட அனைவரும் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர் விஜயகுமார் அவர்கள் அறிவித்து வெற்றி சான்றிதலை மேலூர் அல்போன்ஸ் அவர்களிடம் வழங்கினார் உடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிர்வாகிகள் கார்த்த சுரேஷ், விளாச்சேரி மணிகண்டன் மற்றும் அய்யனார், முத்துக்குமார் ஆகியோர் இருந்தனர்