நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி கீழக்கரையிருப்பு வானவில் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் ஆணைப்படி மாவட்ட சுகாதார அலுவலர் உத்திரவின்பேரில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சர்க்கரை அளவு, இரத்த கொதிப்பு,பொது மருத்துவம் ஆண்கள்,பெண்கள், எலும்பு முறிவு இயன் முறை சிகிச்சை , பல் மருத்துவம், கண் பரிசோதனை, தொழுநோய் பரிசோதனை , காசநோய் பரிசோதனை ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பி. பிரிதிவி ராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே.செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் சி.செந்தில்குமார், சுத்தானந்த கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, செவிலியர்கள் மற்றும் வானவில் பள்ளி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.