மதுரை மாவட்டம் அழகர்கோவில் ரோடு, காதக்கிணறு பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் கீதாலயா ஆன்மீக அமைப்பு சார்பாக விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஒப்புவித்து Bucephalus international Book of Records உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி கீதாலயா அமைப்பின் நிறுவனர் சரோஜினி ஜெகதீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு 60 நிமிடங்கள் என நிர்ணயித்திருந்த நிலையில் 56 நிமிடத்திலேயே முடித்து உலக சாதனை படைத்தனர்.
இந்த சாதனையை நேரில் 152 பேரும் ஆன்லைனில் 116 பேரும் என மொத்தம் 268 பேர் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். Bucephalus international Book of Records நிறுவனர் டாக்டர் சித்ராமாய் தலைமையில் தீர்மானிப்பாளர் டாக்டர் தேவகி உள்ளிட்ட குழுவினர் கண்காணித்து இந்நிகழ்ச்சியை உலக சாதனையாக அங்கீகரித்தனர்.
பின்னர் உலக சாதனை படைத்தவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..