நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 275 வது நாளாக உணவு வழங்கும் நிகழ்ச்சியை டிரஸ்ட் நிறுவனர் ஸ்டார் குரு தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருந்து கவனித்து வரும் காப்பாளர்களுக்கும் என தினமும் 1000 பேருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக இடைவிடாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டம் தொடங்கி 277 நாளான இன்று உணவு மற்றும் பழங்கள், குடிநீர் பாட்டில் வழங்கும் நிகழ்வை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஸ்டார் குருசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இடைவிடாமல் தினமும் அருமையான உணவை வழங்கி வரும் நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.