நாகை அருகே செம்பியன் மகாதேவியில் கனமழை காரணமாக கூரை வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பரிதாப பலி: பெற்றோர்கள் மற்றும் தங்கை காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவி ஊராட்சி விநாயகன்தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ்-லெட்சுமி தம்பதியினர். இவர்கள் தனக்கு சொந்தமான கூரை வீட்டில் தனது மகள் மற்றும் மகனோடு வசித்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று இரவு வீட்டில் படுத்து உறங்கிய போது எதிர்பாராத விதமாக கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து மேலே விழுந்தது. இதில் அவர்களது 13 வயது மகன் கவியழகன் மீது வீட்டின் பக்கவாட்டு சுவர் விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடல் பாடுகளில் சிக்கிய சிறுவனை உடனடியாக மீட்ட அக்கம் பக்கத்தினர் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லேசான காயங்களோடு தற்பொழுது பெற்றோர்கள் மற்றும் அவரது மகள் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர் . உயிரிழந்த சிறுவன் செம்பியன் மகாதேவி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கதறி அழும் சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.