விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் டால்மியா சிமெண்ட் நிறுவனர் ஜெய்தயால் டால்மியா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் முள்ளிச்செவல், பெரிய ஓடப்பட்டி, சங்கராபுரம் -உப்பத்தூர் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள கிராம மக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான தையல் இயந்திரம், சிறு வணிகர்களுக்கு தொழில் உதவி உபகரணங்கள் ஆகியவை 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்க பட்டது. அதை தொடர்ந்து மரக்கன்று நடுதல், கண் சிகிக்சை முகாம் ஆகியவைகள் நடத்தப்பட்டது.
மேலும் டால்மியா நிறுவன ஊழியர்கள் உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் நடந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு 20க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினர். இந்நிகழ்வில் டால்மியா நிறுவன உயர் அதிகாரிகள் ராபர்ட் , வீரபாண்டியன் மரு.ராஜ்குமார் அரசு மருத்துவர், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.