மேட்டூர் அணையின் நீர்மட்டம் (13-12-2024) மாலை 8.00 மணியளவில் 117.57 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் மற்றும் அதற்கு கீழ்பகுதியில் (Down Stream) உள்ள கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரிநீரும் காவிரி ஆற்றில் சுமார் 35,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே, காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 60,000 கனஅடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாலும், கொள்ளிட கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.