மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், காஞ்சிவாய் மற்றும் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை ஆகிய பகுதிகளில் சம்பா சாகுபடி பயிர்கள் மற்றும் நண்டலாறு வடிகால் வாய்க்கால் நீரொழிங்கியினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் காஞ்சிவாய் கிராமத்தில் நண்டலாறு வடிகால் வாய்க்காலில் மழைநீர் வடிந்து செல்வதையும், நண்டலாறு நீரொழிங்கி பகுதியில் ஆகாய தாமரை அகற்றும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும்,மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து விளாகம் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் மற்றும் நல்லாடை கிராமத்தில் மழைநீர் சூழந்துள்ள சம்பா பயிர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு,விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர்,மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது…
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனையொட்டி, குடியிருப்பு பகுதிகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுள்ளது. சம்பா சாகுபடி பயிர்களை சுற்றி மழைநீர் சூழந்துள்ளதை வடிய செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் வாய்க்கால்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக இதுவரை 167 புகார்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர்,குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஷ்வரி,ஷோபனா, குத்தாலம் வட்டாட்சியர் சத்யபாமா, தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.