தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் வழக்கறிஞர் சர்க்கார் பட்னவி ஆணைக்கிணங்க, மதுரை விளக்குத்தூண் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கி பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்து பொருட்களை வாங்க வந்தவர்களை நிறுத்தி மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிர்வாகிகள் பேசினர்.
இந்நிகழ்வில் தேசிய துணைத் தலைவரும், மாநில சேர்மனுமாகிய டாக்டர் கஜேந்திரன், தேசிய செய்தி தொடர்பாளரும், மாநில துணைத் தலைவருமான கீதாமுருகன், மாநில துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார், தேசிய செயலாளர் சீமா, மாநில துணைத் தலைவர் குருலட்சுமி கஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் மீனாள்,மாநில செயலாளர்கள் ஆனந்தன், துரைப்பாண்டி,இணைச் செயலாளர்கள் சின்னச்சாமி பெருமாள், தெற்கு மாவட்ட தலைவர் கோல்டு முருகன் மற்றும் நிர்வாகிகள் மலர்விழி, பிரகாஷ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.