ஐந்து நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி “அடுமனைப் பொருட்கள் தொழில் நுட்பக் கலை – பாரம்பரியத்திலிருந்து புதுமை வரை நடைபெற்றது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியான சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை, அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் வேளாண்மையில் பெண்கள் என்ற திட்டத்தின் சார்பில் தேனி மாவட்டம் பெண் விவசாயிகள் மற்றும் சிறு தொழில் தொடங்குபவர்களுக்கு ஐந்து நாள் 10.12.2024 முதல் 14.12.2024 வரை திறன் மேம்பாட்டு பயிற்சியானது “அடுமனைப் பொருட்கள் தொழில் நுட்பக் கலை – பாரம்பரியத்திலிருந்து புதுமை வரை “என்ற தலைப்பில் 10.12.2024 ம் தேதி சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்பட்டது.
இதில் முனைவர். ச. ஆரோக்கிய மேரி, இணை பேராசிரியர் அவர்கள் வரவேற்புரை மற்றும் இந்நிகழ்வு நடைபெறுவதற்கான நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், முதல்வர், முனைவர். ச.காஞ்சனா, அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மதிப்புக் கூட்டுதலில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் பங்கு, நவீன முறை பேக்கிங் தொழில் நுட்பம், மின்னணு தொழில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இணையவழி சந்தைபடுத்துதல் மற்றும் அடுமனைப் பொருட்களின் எதிர்காலம் குறித்து எடுத்துரைத்தார். முனைவர். இர.விஜயலெட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர்.ஜெ.புஷ்பா, முனைவர். க.சசிதேவி, மூத்த விஞ்ஞானி மற்றும் திருமதி. எம். ரம்யா சிவசெல்வி எஸ்.எம். எஸ் ஆகியோர் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் முனைவோர் மேம்பாட்டில் தொழில் நுட்பம் குறித்த செயல்விளக்கம் மற்றும் அனுபவத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
முனைவர்.ஆர். சரவணக்குமார், மூத்த விஞ்ஞானி அவர்கள் இந்நிகழ்விற்கான நன்றியுரையினை வழங்கினார். இதில் முனைவர்.லெ.செந்தாமரை செல்வி வெ.மோனிஷா, முனைவர் சங்கீதா மற்றும் அ.ஆனந்த், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து புட்டிங் கேக், சிறுதானிய குக்கீஸ், நாட்டுச்சர்க்கரை குக்கீஸ் மற்றும் வெண்ணெய் குக்கீஸ் தயாரித்தல் பற்றிய செயல்முறை விளக்கமானது 10.12.2024 அன்று வழங்கப்பட்டது. 11.12.2024 அன்று பிளம் கேக், பன், கேக், ரொட்டி தேங்காய் பன், ஜாம் பன் மற்றும் கீரிம் பன் போன்றவை தயாரித்தல் பற்றி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டது.
சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள ஒருங்கிணைந்த இன்குபேஷன் மையம் (Common Incubation Centre) உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பயறுகள் பதப்படுத்தும் இயந்திரங்களை பார்வையிட்டனர். இதில் 30 பெண் விவசாயிகள் மற்றும் சிறு தொழில் தொடங்குபவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.