சர்வதேச போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன
சர்வதேச போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
சர்வதேச போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. Jai S 268 Stories Monday December 16, 2024 , 1 min Read சர்வதேச போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.16) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 215.59 புள்ளிகள் சரிந்து 81,917.53 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 49.45 புள்ளிகள் சரிந்து 24,718.85 ஆக இருந்தது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச் சந்தை இறங்கு முகமாக இருப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 384.20 புள்ளிகள் (0.47%) சரிந்து 81,748.92 ஆகவும், நிஃப்டி 89.90 புள்ளிகள் (0.36%) வீழ்ச்சி கண்டு 24,678.40 ஆகவும் இருந்தது.
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து ரூ.84.03 ஆக இருந்தது.