நாகப்பட்டினம் மாவட்டத்தில்
வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்து பிறப்பான கிறிஸ்துமஸ் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் இயேசுவின் பிறப்பை,
நினைவு கூறும் விதமாக,கிருத்துவர்களின் இல்லம் நோக்கி குழுவாக ஒவ்வொரு ஆண்டும் செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும்போது , கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து செல்வதும், ஆடல் பாடல் பாடி இல்லம் தோரும் சென்று, இனிப்பு வழங்கியும், புத்தாண்டு காலண்டர் வழங்கியும்,
ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவது
வழக்கம். இவ்வாண்டும் புனித லூர்து அன்னை பங்கின் சார்பாக உதவி பங்கு தந்தை மரிய பிரகாசம் மற்றும் அருட்தந்தை சுவாமிநாதன் ஆகியோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம அணிந்து குழுவினருடன் சென்றனர் கிறிஸ்மஸ் தாத்தா உடன் அப்பகுதி குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆடல் பாடல் பாடி மகிழ்ந்தனர் மேலும் கிறிஸ்தவ இல்லங்களை அருட் தந்தையர்கள் மந்திரித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.