நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு விடம் வாழ்த்து பெற்றார்.
நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனரிடம் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை வாழ்த்து பெற்றார்
மதுரை கீழவாசலை அருகே உள்ள தவிட்டுச்சந்தையை சேர்ந்தவர் பூங்கொடி. மாற்றுத்திறனாளியான இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் கம்போடியாவில் நடந்த பாரா த்ரோபால் விளையாட்டு போட்டியில், இந்தியா சார்பாக கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இவர், சாட்புட், ஜாவ் லிங் த்ரோ மற்றும் டிஸ் கஸ் ஆகிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் 160 தங்கம், 73 வெள்ளி, 35 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். சீனா, தென் கொரியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் நடந்த போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் 2019ல் ஏற்பட்ட விபத்துக்குபின் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் சமீபத்தில் கம்போடியாவில் நடந்த பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்க ஸ்பான்சர் தேடி வந்தார். அப்போது, மதுரையைச் சேர்ந்த நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் குருசாமி அவர்களை சந்தித்து கம்போடியா போட்டியில் கலந்து கொள்வதற்கான முழு செலவையும் ஏற்பதாக உறுதியளித்து அனுப்பி வைத்தார். இதையடுத்து, அங்கு நடந்த போட்டிகளில் தங்கம் வென்றதுடன், ஆசிய அணிக்கு பூங்கொடி தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து பூங்கொடி கூறுகையில், போட்டியில் பங்கேற்க பெரும் உதவிகள் செய்த நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி மற்றும் பயிற்சியாளர் ரஞ்சித் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இதுகுறித்து, ஸ்டார் குருசாமி கூறும்போது. “பூங்கொடி தங்கம் வென்றது மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அதற்கான அனைத்து உதவிகளையும் நான் தொடர்ந்து செய்வேன்.
நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக, மதுரை அரசு மருத்துவம னையில் தினமும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.மேலும் மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில், விளையாட்டு வீரர்களுக்கும் உதவிகளை செய்து வருகிறோம் என கூறினார்.