சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மதுரை மாநகர் மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பாக அவரது ஒவ்வொரு பிறந்தநாளன்று ஏழை எளியோர்க்கு பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கியும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் ஏழை நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தியும்,ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கியும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே.
மேலும் ரஜினிகாந்தின் ஒவ்வொரு வருட பிறந்த நாளன்றும் மதுரை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் அழகர்சாமி என்பவர் கஷ்டப்படும் சூழ்நிலையில் உள்ள ரஜினி ரசிகரின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை தனது சொந்த செலவில் செலுத்தி வருகிறார்.
மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக மகபூப்பாளையத்தில் துணைச்செயலாளர் அழகர்சாமி மற்றும் எல்லீஸ் கார்த்திக், மாப்பாளையம் முருகன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோருக்கு 5-கிலோ அரிசி,காய்கறி பருப்பு மற்றும் குழந்தைகளுக்கு நோட் புக், பேனா, பென்சில் மற்றும் பெண்களுக்கு குடம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் ஏ.டி.எஸ்.பி குமரவேல் வழங்கினார்.
மேலும் ரஜினி மன்ற நிர்வாகி அஜீத் குழந்தைகள் லோகேஷ், ஜனனி ஆகிய இருவருக்கும் பள்ளி சீருடை, நோட் புக்ஸ் மற்றும் 2025-ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணம் 25.ஆயிரம் ரூபாய் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இதில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாலநமச்சிவாயம் மற்றும் கோல்டன் சரவணன், எம்.எம் முத்துப்பாண்டி, அவனி பாலா,இன்பா,தென்பாண்டி,சரவணன்,மணி, முத்துக்குமார், திடீர்நகர் ஆறுமுகம், உதயகுமார்,ரஜினி ஹரீஷ், அருள், கேங்காளி உள்பட ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.