குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் சீரிய நோக்கத்துடன் தமிழக முதல்வர் அவர்களால் 11.12.2024 அன்று “கலைஞர் கைவினைத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற 35 வயது முதல் 55 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ரூ.3,00,000/- இலட்சம் வரை பிணையற்ற கடன் உதவி பெறலாம். அதிகபட்ச மானிய தொகை ரூ.50,000/- ஆகும். பின்முனை வட்டி மானியமாக 5 சதவீதம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், மண்பாண்டம் வனைவோர், சிற்ப கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர். பூ அலங்காரம் செய்வோர். சிகை அலங்காரம் செய்வோர், அழகு கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கிலாலன பொருட்கள் செய்வோர், நெசவு செய்வோர், துணி வெளுப்போர், சாயமிடுவோர். கட்டடம் கட்டும் வேலை செய்வோர், தோல் பொருட்கள் செய்வோர், உலோக பொருட்கள் செய்வோர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர் உள்ளீட்ட அரசால் நிர்ணயிக்கப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்கள், நல வாரிய அட்டை, பான்கார்டு, விலைப்புள்ளி: சாதிசான்றிதழ், தகுந்த முன் அனுபவச்சான்று( 5 வருடம்) மற்றும் புகைப்படம் ஆகும்.
இத்திட்டத்தில் பதிவு செய்ய msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இரண்டு விண்ணப்ப நகல்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரக வளாகம், மயிலாடுதுறை (நான்காம் தளம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்கள் பெற 04364-212295 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.