மதுரை செய்தியாளர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை மற்றும் கிறிஸ்டல் விஷன் ஆப்டிகல்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய செய்தி மற்றும் பத்திரிக்கையாளர்கள் குடும்பத்தினருக்கான கண் மருத்துவ பரிசோதனை முகாம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மதுரை செய்தியாளர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.S.சீனிவாசன், கிரிஸ்டல் விஷன் கண் கண்ணாடி நிறுவன உரிமையாளர் தஹியா,மண்டலத்தலைவர் வாசுகி சசிக்குமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அரசு வழக்கறிஞர் அன்புநிதி, மீனாட்சியம்மன் கோவில் அறங்காவல்குழு உறுப்பினர் மீனா அன்புநிதி,
ஹைடெக் அராய் நிறுவன இயக்குனர் மதிவாணன், புதூர் காவல்நிலைய ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்சிகிச்சை முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் மதுரை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கதிரவன், செயலாளர் ரமேஷ் பாண்டியன் பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்
இம்முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் மதுரை செய்தியாளர் சங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேசர் கண் சிகிச்சை ரூ.20,000/-க்கு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய தலைமை மருத்துவர் சீனிவாசன் : இது போன்ற செய்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான கண் சிகிச்சை முகாமை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதுபோன்ற வாய்ப்பை அளித்த சங்கத்திற்கும் நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி என தெரிவித்தார். மேலும் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது மருத்துவமனை சார்பில் இனி வரும் நாட்களில் கட்டணமின்றி மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்க ஆவண செய்கிறேன் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மண்டல தலைவர் வாசகி சசிகுமார் தலைவர் கலைஞர் அவர்கள் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சங்கத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தன் கண்ணாடி வழங்குவதற்கான அனைத்து உதவிகளையும் தான் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்