சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தெலுங்கானா, கோவா மாநில பொறுப்பாளருமான முன்னாள் எம்.பி விஸ்வநாதன் தலைமையில் மதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி ஆகியோர் முன்னிலையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்னர் காந்தி மியூசியத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அம்பேத்கர் படத்தை கைகளில் ஏந்தி கொண்டு நிர்வாகிகள் பேரணியாக சென்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவிடம் அமித்ஷா மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன்,எஸ்.எஸ்.போஸ், ஜெய்ஹிந்த்புரம் எஸ்.வி முருகன், ராஜபிரதாபன் மற்றும் நிர்வாகிகள் அசார்உசேன், கோல்டு ஹரிகரன் உள்பட மூன்று மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் 5-வது சர்க்கிள் கமிட்டி தலைவரும், 31-வது வார்டு கவுன்சிலருமான தல்லாகுளம் முருகன் நன்றி கூறினார்.