வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்த பின்பும், இன்றுடன் 1000 நாட்கள் ஆகியும் திமுக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்காக எந்த முயற்சியும் திமுக அரசு செய்யவில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய அறப்போராட்டம் இன்று நடைபெற்றது,
விழுப்புரத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தினர், ஏனைய மாவட்டங்களில் மாவட்ட தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஏராளமான பெண்களும் பொதுமக்களும், இளைஞர்களும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர், போராட்டத்தில் மாவட்டத் தலைவர் கோசு மணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார், மாவட்டச் செயலாளர் சித்தமல்லி ஆ பழனிச்சாமி அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விசிகே காமராஜ், காசி பாஸ்கர் அத்தான் ஜெயராமன், முருகவேல், தேவி குரு செந்தில், மைனர் சந்திரசேகர், எம் ஆர் ஜே முத்துக்குமார், ராஜ்குமார் அய்யாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்