ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் குறித்து இந்தியா கூட்டணி கட்சியினர் அமித்ஷா பேச்சை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், மாவட்ட துணை செயலாளர் அரா.பேரறிவாளன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராகவும் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவர் சொன்ன கருத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் நகர செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ்,மாநில மாவட்ட நிர்வாகிகள் முருகன், வீரக்குமார், தமிழ்பாண்டியன், உமாநாத், ஜெயசந்திரன், முருகானந்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.