மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக சார்பில், தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு செம்பனார்கோயில் கீழமுக்கூட்டில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், அமுர்த விஜயகுமார், எம்.அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சித்திக் அருள்செல்வன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி அர்சத் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.