மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், ஆயர்பாடி தனியார் திருமண மண்டபத்தில் திமுக பாமக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பிரபு ஏற்பாட்டில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட அ இ அ தி மு க செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் திருக்கடையூர் ஊராட்சி சிங்கனோடை, பிச்சகட்டளை, அபிஷேககட்டளை, நீச்சான்குளம், வெள்ளகுளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திமுக, பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் சால்வை போர்த்தி வரவேற்றார் நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி ஜி கண்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம் கே குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், மயிலாடுதுறை மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளார் எம்.எம்.நியாஜீர் அகமது, டீ மணல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.