மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில் இயங்கிவருகிற த.பே.மா.லு கல்லூரி 4 மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் வெற்றிப்பெற்று சாதனைப்படைத்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட மயிலாடுதுறை,திருவாரூர்,கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 -க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் பொறையார் த.பே.மா.லு கல்லூரி இரண்டாவது பரிசை பெற்றுள்ளது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இரண்டாவது இடம் பெற்று வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் ஆகியோரை டி.இ.எல்.சி பேராயரும், கல்லூரியின் செயலரும், தாளாளருமான முனைவர் கிறிஸ்டியன் சாம்ராஜ், செயலர் தங்கப்பழம் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ஜான்சன் ஜெயக்குமார், துணை முதல்வர் மற்றும் காசாளர் ஆகியோர் வாழ்த்தி , பாராட்டுக்களை தெரிவித்தனர்.