மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் (16.12.2024 முதல் 22.12.2024- வரை) மாவட்ட காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அமைப்புகள் அடங்கிய குழு, தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் கஞ்சா/போதைப்பொருட்கள் விற்பனை தடுத்தல் தொடர்பாக மாவட்டம் முழுவதிலும் 1103 இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டது. இதில் 1.64 கிலோ கஞ்சா மற்றும் 98.366 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனையில் ஈடுப்பட்ட 30 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, 09 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு, ரூ.2,25,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.