வீரமங்கை வேலு நாச்சியாரின் 228 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை லேக் ஏரியா பகுதியில் உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை அலுவலகத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆணைக்கிணங்க, மாநில தலைமை கழக செயலாளர் எஸ். வேலுச்சாமி தலைமையில் வேலு நாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மண்டலத் தலைவர் எஸ். எம். நாகராஜ் தேவர்,தொழிற்சங்க பொருளாளர் எஸ். செல்வராஜ்,மண்டல இளைஞர் அணி செயலாளர் சாலை பிரபாகரன், பொருளாளர் ராமசாமி, சேகர் பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.