சுனாமி ஏற்பட்டு 20ஆம் ஆண்டு நினைவு தினம் நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் 6065பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்து வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.ஜி.ஏ.சேகர் தலைமையில் நாகை அண்ணா சிலையிலிருந்து நீலா கீழவீதி,புதுப்பள்ளி வழியாக ஆரியநாட்டு தெரு கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதில் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் ஆல்பர்ட் ராயன், வீரமணி, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.