உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த 5 ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வார்டுகளில் ஆள் இல்லாமல் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தனியார் நிறுவனம் கருத்தில் கொண்டு உடனே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் .
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், தனியார் நிறுவனம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில் செக்யூரிட்டி, துாய்மைப்பணி ஆகியவற்றில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக, 725 ரூபாய் வழங்க வேண்டும்.
ஆனால், 534 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ.. பிடித்தம் தகவல் தரப்படவில்லை என்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதை கண்டித்து, மருத்துவமனையில் பணியாற்றும் செக்யூரிட்டி மற்றும் துாய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தனியார் ஒப்பந்ததாரர்கள் தொழிலாளிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை மட்டும் சுரண்டுவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.