அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.வின் ஆலோசனைப்படி, மதுரை மாநகர் மாவட்ட மேற்கு 2-ம்பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர் ஏ. தங்கபாண்டி தலைமையில் 73, 78, 79, வட்டக்கழக, கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பரவை ராஜா,திரவியம், வக்கீல் தமிழ்செல்வன், வட்டக் கழக செயலாளர்கள் பந்தல் நாகலிங்கம், முருகேசன், சுரேஷ்குமார், மணிகண்டன், ராஜா சீனிவாசன், கனகராஜ் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் மோகன், நாகலட்சுமி, தியாகராஜன், சந்திரா, கராத்தே கார்த்தி உள்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.