அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே உள்ள பந்தடி 7-வது தெருவில் நடைபெற்றது.
மேலும் 2025 வருட காலண்டர் வெளியிடப்பட்டது. கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை மதுரை மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநிலத் தலைவர் சதுரகிரி, மாநில பொருளாளர் சுபாஷ், மாநில துணைத்தலைவர் உதயகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் யோகதாசன், மாநில செயற்குழு உறுப்பினர் கிட்டு என்ற எஸ்.பி.கிருஷ்ணசாமி ஆகியோர் சங்கத்தின் செயல் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். இதில் மதுரை மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, இணைச்செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.காலனி செந்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் குமார், செல்வராஜ், முத்துவேல், பகுதி தலைவர்கள் போஸ்டர் முத்துச்சாமி, எம்.எஸ் குமார், ராம்குமார், ஜான்பாட்ஷா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.