மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரம் வானாதிராஜபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தூய்மை பாரத இயக்க திட்ட பணிகளின் கீழ் நூறு சதவீதம் மக்கும் குப்பைகளை பிரித்து வழங்குதல், வகைப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி திட்ட அலுவலர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷோபனா, புவனேஷ்வரி உடன் இருந்தனர்.