தமிழில் பெயர் பலகை வைத்துள்ள வணிகருக்கு தமிழ் நாடு வணிகர் சங்கப் பேரவையின் மாநில துணைத் தலைவர் பாராட்டு.
கடலூர் துறைமுகம் மணிக்கூண்டு அருகில் தேநீர் கடை வைத்திருக்கும் நெடுஞ்செழியன் நல்ல தமிழ்ப் பற்றாளர் மேலும் சமூக ஆர்வலர் இந்த பகுதி மக்களுக்கு நல்ல தொண்டு செய்து வரும் இவர் தமது கடைக்கு குணா தேநீர் அருந்தகம் என்று அழகான தமிழில் பெயர் வைத்துள்ளார். அவரின் தமிழ்ப்பற்றினைப் பாராட்டி
ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் தலைவர் மற்றும் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில துணைத் தலைவர் டாக்டர். இராம. முத்துக்குமரனார்
பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.