நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கோகூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித அந்தோனியார்
இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.கடந்த வருடம் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டு கொடிமர திருவிழா நடைபெற்றது.
முன்னதாக அருட்தந்தை ஜான் பீட்டரால் சிறிய தேர் மந்திரிக்கப்பட்டு கிராமங்களில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக கொடி ஊர்வலம் வலம் வந்தது. மேலும் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து கம்பத்தில் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்று திருத்தலத்தில் புதிதாக தந்தை ஆயரால் நற்கருணை புனிதம் செய்து வைக்கப்பட்டது இதில் கீழ்வேளூர் பங்குத்தந்தை தேவ சகாயம் மற்றும் அருட் தந்தையர்கள் இறைமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.