மதுரை மாநகர் அதிமுக வடக்கு 2-ம் பகுதிக்கு உட்பட்ட, 26,32,15 வடக்கு மற்றும் கிழக்கு வார்டுகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.அண்ணாதுரை, பொறுப்பாளர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் கே.ஜெயவேல், வழக்கறிஞர் சுரேஷ், மகளிரணி மாவட்ட செயலாளர் சுகந்தி அசோக், பாசறை மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.
இந்நிகழ்விற்கு பகுதி தலைவர் எஸ்.முருகன் மற்றும் கமலக்கண்ணன், எஸ்.ரவி, பாசறை பகுதி செயலாளர் எம்.தினேஷ்குமார், பகுதி மகளிரணி செயலாளர் ராகவி கண்ணன், வட்டக் கழக செயலாளர்கள் பி.பால்பாண்டி, ஏ.ஆர்.வேல்மணி, எம்.மகேந்திரன், எம்ஜிஆர் ஹோட்டல் கண்ணன், எம்.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சுமார் 250-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பங்கேற்ற புதிய நிர்வாகிகளை அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக பகுதி கழக செயலாளர் வி.கணேசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.