மதுரை டிசம்பர் 30
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இன்று திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த வகையில் மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் செல்லூர் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்எல்ஏ மற்றும் ஏராளமான அதிமுகவினரை கைது செய்து அருகிலுள்ள கண்ணையா முத்தம்மாள் மண்டபத்தில் அடைத்தனர்.