கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, மதுரையில் தேமுதிக தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கோல்டு முருகன்,பொருளாளர் அய்யப்பன், தலைவர் முனியாண்டி ஆகியோர் மதுரை மேலமடை, யாகப்பா நகர் சிமிண்ட் ரோடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கினர். முன்னதாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் தீப விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.