நாகை:
தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் வழங்கினார்கள். நாகப்பட்டினம் நகர்மன்றத்தலைவர் இரா.மாரிமுத்து, மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு ஆர்.சரோஜினி, மாவட்ட சமூகநல அலுவலர் கி.திவ்யபிரபா, முன்னோடி வங்கிகளின் மாவட்ட மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.