மதுரை தீக்கதிர் எதிர்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவில் தமிழக இந்து மகா சபா சார்பாக புதிய பொறுப்பாளர்கள் சேர்க்கை கூட்டம் மதுரை மாவட்ட செயலாளரும், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவருமான பூசாரி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.டி.ராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்வின் போது சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தமிழக இந்து மகா சபா அமைப்பில் இணைந்தனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது.