சென்னை: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பாமக மகளிர் அணியின் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போராட்டம் அறிவித்தபடி நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அறிவித்தது, போராட்டத்திற்காக தி.நகர் வீட்டில் இருந்து புறப்பட்ட சௌமியா அன்புமணி போராட்ட இடத்திற்கு வந்தவுடன் கீழே இறங்கவிடாமல் வாகனத்தில் இருந்து காவல்துறை வேனில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டார், மேலும் கோஷங்கள் எழுப்பக் கூடாது என காவல்துறை கூறி வந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்திற்காக வந்திருந்த பாமக மகளிர் அணியினரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர், சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக பாலியல் பிரச்சனை குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சினர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர், சௌமியா அன்புமணி அவர்களும் இன்று மாலை விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது