மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் திறந்து வைத்தார்கள்;.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் திறந்து வைத்தார்கள்;. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகிக்க, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திரு.நிவேதா எம்.முருகன் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.பன்னீர்செல்வம் அவர்கள், கூடுதல் ஆட்சியர் திரு.முகம்மது ~பீர் ஆலம் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் ஆக்கூர் ஊராட்சியில் ரூ.12 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு தானியக்கிடங்கு, சீர்காழி; வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி; திட்டம் சார்பில் பூம்புகார் ஊராட்சியில் ரூ.12 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு தானியக்கிடங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி;; திட்டம் சார்பில் பூம்புகார் ஊராட்சியில் ரூ.42 இலட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் புங்கனூர் ஊராட்சியில் ரூ.12 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு தானியக்கிடங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி;; திட்டம் சார்பில் பெருமங்கலம்; ஊராட்சியில் ரூ.39 இலட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி;; திட்டம் சார்பில் கொண்டல்;; ஊராட்சியில் ரூ.39 இலட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி; சார்பில் வள்ளுவக்குடி ஊராட்சியில் ரூ.42 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம், கொள்ளிடம் வட்டாரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் ஆச்சாள்புரம் ஊராட்சியில் ரூ.12 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுவிநியோக கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் காட்டூர்; ஊராட்சியில் ரூ.9 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுவிநியோக கட்டிடம் என மொத்தம் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்; தெரிவித்ததாவது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துணை முதலமைச்சராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரை பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றியவர். எல்லா ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை கொண்டு வந்தவர். ஒவ்வொரு ஊராட்சியிலும் தலைமை செயலகத்தை போல ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டம் தான் இந்த கிராம செயலக திட்டம். ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சிமன்ற கூட்டம் நடத்துவதற்கு ஒரு தனியாக கூட்டரங்கம், கிராம நிர்வாக அலுவலர், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு கட்டிடமாக இந்த பணிகளை நிறைவேற்றி தந்திருக்கின்றார்கள். மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கி தந்தார்கள். சுனாமி போன்ற பேரலையில் கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் உள்ளது. ரூ.37 கோடி மதிப்பீட்டில் விவேகானந்தர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கக்கூடிய வகையில் இந்தியாவில் கடலுக்குள் முதல் கண்ணாடி பாலத்தை அமைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்து தந்தவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அனைவரும் வியந்து பார்க்கின்ற வகையில் 2 நாட்கள் நடத்தப்பட்டது. தமிழர்களின் பெருமைகளை மீண்டும் எடுத்து செல்கின்ற வகையில் நமது பூம்புகார். ஒரு முக்கியமான புனித இடம். 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். முக்கால சோழர்களின் தலைநகரமாக இந்த பூம்புகார் விளங்கி இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல், சோழர்களின் துறைமுகமாகவும் இருந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் கதைக்களமாகவும் இருந்திருக்கின்றது. நமது மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கலைக்கூடம் உட்பட அனைத்தையும் உருவாக்கி தமிழர்களின் பெருமைகளை நிலைநாட்டியவர். தற்போது 50 ஆண்டுகளுக்கு பின் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த பூம்புகார் மண்ணில் புதிதாக கட்டிடங்கள் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நமது தமிழ் மொழி என்பது 3000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த மூத்த மொழி, இந்த தமிழ் மொழியின் சிறப்புகள் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் மொழியினை செம்மொழியாக உருவாக்கி தந்தார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ் செம்மொழியை பாதுகாப்பது நமது கடமை. மொழியை பாதுகாத்தால் நமது நாட்டை பாதுகாப்பது போன்றதாகும் என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்; தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்;, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.உமாமகே~;வரி;, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.உமாமகே~;வரி சங்கர்;, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.தயாள விநாயக அமுல்ராஜ்;, சீர்காழி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.கமலஜோதி தேவேந்திரன், கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ஜெயபிரகா~;, செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.நந்தினி ஸ்ரீதர்;, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரே~;, ஒன்றியக்குழு துணைத் தலைவர் திரு.பாஸ்கரன்;, ஊராட்சிமன்ற தலைவர் திரு.சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (செம்பனார்கோவில்) திருமதி.மீனா, (சீர்காழி) திரு.திருமுருகன், திரு.சரவணன், (கொள்ளிடம்) திரு.ஜான்சன், திரு.உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.