சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை திட்டமிடுகிறது
மதுரை, ஜனவரி 3, 2025:
விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கும் சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (சங்கம் ஹோட்டல்), தனது மிக்க மகிழ்ச்சியான 50வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதில் அதன் தரம் மற்றும் சேவையின் மரபை மையமாகச் கொண்டு செயல்படுவதில் இந்த நிறுவனம் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறது சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் 50வது ஆண்டு விழாவை கொண்டாட அதன் குழுமம் அனைத்து ஹோட்டல்களில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், 1975ஆம் ஆண்டு திருச்சியில் சங்கம் ஹோட்டல் நிறுவுவதன் மூலம் அன்பான நினைவுகளையும் இதயப்பூர்வமான அனுபவங்களையும் உருவாக்கும் பயணத்தை தொடங்கியது 1995ஆம் ஆண்டு தஞ்சாவூர் மற்றும் 2002ஆம் ஆண்டு மதுரையில் அதன் நிறுவனத்தை விருத்தி செய்தது. 2008ல், காரைக்குடி மாவட்டத்திலுள்ள கடியாபட்டியில் உள்ள செட்டிநாடு மாளிகை சிதம்பர விலாசை மாற்றுவதன் மூலம் இந்த குழுமம் வணிக மயமான ஹோட்டல்கள் உடன் பாரம்பரிய சுற்றுலாவுக்கும் மாற்றியது, தற்போது திருச்சி மற்றும் மதுரை நிறுவனம், உலகளாவிய தரத்துடன் கோர்ட்யார்ட் மேரியாட் பிராண்டி கீழ் செயல்படுகின்றன. ஆண்டுகள் கடந்தும், சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் குடும்பம் மற்றும் வணிகர்களின் விருப்பத்தைப் பெற்றுள்ளது இந்தியா மற்றும் உலகெங்குமிருந்து நம் மாநிலத்திற்கு வந்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறந்த விருந்தோம்பலை அனுபவித்துள்ளனர்.
சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட். எப்போதும் காலத்திற்கேற்ப புதுமைகளை செய்து வசதிகளை மேம்படுத்தி, பயணிகளின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் அம்சங்களை வழங்கி தனது நிறுவனத்தின் பெயரை மேம்படுத்தி வருகிறது இந்த குழுமம் பல்வேறு முக்கியப் பிரபலமாணவர்களை வரவேற்றுள்ளதுடன் அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் இந்த வசதிகளை அனுபவித்து, தாங்கள் தங்கும் காலத்தை நினைத்து இனிமையாக நினைவில் வைத்திருக்கிறார்கள் ஒரு பொறுப்பான நிறுவனமாக இந்த குழுமம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டு உயர்ந்த பசுமை அளவுகோலைக் கொண்டுள்ளது இதற்கு மேலாக. சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர் செயற்பாடுகள் அந்தப் பகுதியில் உயர்ந்த மதிப்பில் உள்ளது.
இந்நிறுவனம் திருச்சி மற்றும் மதுரை நகரங்களில் மேலும் ஒரு ஹோட்டலை நிறுவ முற்பட்டுள்ளது. ஏனெனில் இவ்விரு நகரங்களும் பெரும் வணிக திறன்களை கொண்டுள்ளன. இந்நிறுவனமானது சென்னையில் ஒரு ஹோட்டலுடன் தனது நிலையை நிலைநாட்ட திட்டமிட்டுள்ளது ஏனெனில் இது ஒரு முக்கியமான சந்தையாகும் சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் சுற்றுலா துறையிலும் தடம் பதித்து உள்ளது மேலும் ராமேஸ்வரம் பகுதியில் 30 ஏக்கர் கடற்கரை நிலத்தில் ஒரு ரிசார்ட்டை கட்ட திட்டமிட்டுள்ளது.
தன்னுடைய லட்சிய வளர்ச்சிக்கான உத்தியின் ஒரு பகுதியாக, இந்த நிறுவனம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சரியாக 400 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இந்த முக்கியமான முதலீடு, முக்கிய சந்தைகளில் தனது பரப்பளவை விருத்தி செய்யவும் மற்றும் சேவை வழங்கல்களை மேம்படுத்தவும் நிறுவத்தின் பார்வையை பிரதிபலிக்கிறது. இதற்கிடையில், சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட். தமிழ்நாட்டில் தனது அறை எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கவுள்ளது.
சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்., நிர்வாக இயக்குநர் திரு. வி வாசுதேவன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்., திருச்சியில் அமைந்துள்ள ஒரு குடும்ப நிறுவனமாகும். கடந்த 50 வருடங்களாக விருந்தோம்பல் தொழிலில் செயல்பட்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் மற்றும் எங்கள் பொன் விழா ஆண்டை கொண்டாடுகிறோம். எங்கள் மதிப்புமிக்க விருந்தினர்களுக்காக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர் நிறுவனம் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்பதற்கும் தொடர்ச்சியாக பயணிப்பதற்கும் அவர்கள் தான் உண்மையான காரணம் எங்கள் வளர்ச்சியை எளிதாக்கிய சிட்டி யூனியன் வங்கிக்கு நன்றியை தெரிவிக்கிறோம். வருங்காலங்களில் நாங்கள் மேலும் விருந்தினர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சேவையாற்ற விரும்புகிறோம் இந்த சிறப்பான நிகழ்வின் போது இந்த நிறுவனத்தின் முந்தைய நிறுவனர்கள் மற்றும் இயக்குநர்களின் பங்களிப்புகளை நினைவுகூர விரும்புகிறோம். மாபெரும் சமூக சேவகர் திரு ஆர்.கிருஷ்ணசாமி ரெட்டியார் இந்த நிறுவனத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்த திரு கி.சின்னப்பாபு மற்றும் குழுமத்தின் விரிவாக்கத்தை முன்னெடுத்த திறமையான நிர்வாகியாக இருந்த திரு வி வெங்கடராமன் அவர்களையும் நினைவுகூற விரும்புகிறோம்.
செயல் இயக்குனர் திரு.முரளிகிருஷ்ணன் கூறுகையில் நாங்கள் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்க இந்த மைல்கல்லுக்கு எங்களை கொண்டுவரும் பந்தகால் பயணத்தை நினைவுகூர விரும்புகிறோம். எங்கள் மதிப்புகள் வாக்குறுதிகள் மற்றும் உறுதிபடுத்தல்களை நிறைவேற்றுவதற்காக முக்கியமான பங்கு வகித்த எங்கள் நலம் விரும்பிகள் மற்றும் விற்பனையானர்களுக்கும் நன்றியை கூறுகிறோம் எங்கள் பாரம்பரியத்தில் நாங்கள் பெறுமிகம் கொள்வதுடன் எதிர்காலத்தைப் பற்றி மேலும் மகிழ்ச்சி அடைகிறோம் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து புதுமைகள் செய்வதோடு, சிறந்த அனுபவங்களை வழங்குவதற்கான மேற்கொண்ட உறுதி எங்கள் செயல்களில் மையமாகவே இருக்கும்.”
திரு.ரவி பிள்ளை, குழும பொது மேலாளர், கூறுகையில் கடந்த 50 ஆண்டுகளில், எங்கள் நிறுவனம் கனிசமாக வளர்ந்துள்ளது. எங்களது அசாத்தியமான செயல்திறன் மிக்க குழுவின் அர்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடுமையான உழைப்பிற்கும், எங்கள் விசுவாசியான விருந்தினர்களின் ஆதரவும் இதற்குக் காரணம் இந்த ஆண்டு விழா, நாங்கள் வணிகத்தில் இருந்த கால அளவுக்கென்று மட்டும் அல்ல-நாங்கள் கட்டிய உறவுகள். உருவாக்கிய நினைவுகள் மற்றும் எங்கள் வரவேற்பின் சுவடுகள் பற்றியது. ஒரு பொறுப்பான நிறுவனமாக, குழுமம் விருந்தினர்களின் அனுபவங்களை மேம்படுத்தவும் சமூக பொறுப்புணர்வைப் விதைக்கவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எங்கள் அனைத்து ஹோட்டல்களிலும் சில முக்கியமான நடைமுறைகள் முயற்சிகளை செயல்படுத்தியுள்ளோம்.
சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் புதிய அத்தியாயத்தில் நுழைகிறது இதுவரை எங்களுக்கு ஆதரவு வழங்கிய வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் மற்றும் எங்கள் நிறுவனத்தின் மீது அக்கறை உடையவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது அவர்கள் அனைவரும் சேர்ந்து சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிட்டெடின் வெற்றிக்கதை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.