மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
காட்டுச்சேரி, டீ .மணல்மேடு, எரவாஞ்சேரி, நல்லாடை, ஈச்சங்குடி, கீழ்மாத்தூர், மாத்தூர், மாமாகுடி உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் சுமார் ரூ.3 கோடி 88 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலகம், நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடம், பேருந்து பயணிகள் நிழலகம், பள்ளி வகுப்பறை உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி. எம். ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட திமுக துணை செயலாளர் மு. ஞானவேலன், ஒன்றிய செயலாளர் எம் அப்துல் மாலிக், அமுர்த.விஜயகுமார், பி.எம். அன்பழகன், முருகமணி, செம்பை ஒன்றிய துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தலைமை திமுக பொதுக்குழு உறுப்பினர் நத்தம் வின்சென்ட் உள்ளிட்டோர் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள்,திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.