நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த எஸ்.கே.ஜி.ஏ.சேகர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.இணைந்த நாளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் நற்பெயருக்கும் முரணாக செயல்பட்டு வருவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில் மாவட்ட தலைவர் சுகுமாறன் பரிந்துரையின் பேரில் தவெகவில் எவ்வித பொறுப்பும் வகித்து வராத எஸ்.கே.ஜி.ஏ.சேகர் என்பவர் இன்று முதல் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.
இவருடன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.