இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், ‘யார் அந்த சார்?’ என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து வந்தனர். அவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். உரையை கவர்னர் புறக்கணித்ததைக் கண்டித்து காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.