மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், 01.01.2025-ஐ தகுதி நாளாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை https://voters.eci.gov.in/ மற்றும் http://elections.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் Voter Helpline செயலியினை பதிவிறக்கம் செய்தும் காணலாம். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,75,458 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள்-3,81,543, பெண் வாக்காளர்கள்-3,93,869 மூன்றாம் பாலின வாக்காளர்கள்-46 இடம் பெற்றுள்ளனர். இறுதியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும் போது தற்சமயம் 14,237 வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் 12,326 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 18 முதல் 19 வயதுடைய 14,355 இளம் வாக்காளர்களும், 80 வயதிற்கு மேற்பட்ட 15,641 மூத்த வாக்காளர்களும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 6488 பேரும் இடம் பெற்றுள்ளனர் என மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.உமாமகேஷ்வரி;, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முத்துவடிவேல்;, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.விஷ்ணுபிரியா அவர்கள், தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.முருகேசன்; ஆகியோர் கலந்து கொண்டார்