மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 229 மனுக்கள் பெறப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.01.2025) நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 36 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 22 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 20 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 22, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 15 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 31 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 19 மனுக்களும் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 12 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 13 மனுக்களும் கலைஞர் கனவு இல்லம் வேண்டி 32இ மதுவிற்பனை செய்து மனம் திருந்தி வாழ்வோர் மறுவாழ்வு மனுக்கள் 10 மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி ஒருவருக்கு ரூ.2940 மதிப்பில் மானியத்துடன் கூடிய உளுந்து விதையையும், தாட்கோ சார்பில்; 9 தூய்மை பணியாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் திரு.முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.உமாமகேஷ்வரி;, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.கீதா, வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.சேகர்;, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.தயாள விநாயக அமுல்ராஜ்;, தாட்கோ மாவட்ட மேலாளர் திரு.செல்வக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்