மதுரை அனுப்பானடி ரோட்டில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் டாக்டர் வேணுகோபால் ராவ், டாக்டர் ஹரிச்சந்திரா ரமனே, டாக்டர் ஆராதனா வைதியா ஆகியோர் வருகை தந்து கல்லூரியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
முன்னதாக கல்லூரியின் சார்பாக தலைவர் எம்.கே ஜவஹர்பாபு, தாளாளர் எம்.வி.ஜனரஞ்சனி பாய், முதல்வர் டாக்டர் கோமதி, துணை முதல்வர் முனைவர் மஹிமா,நிர்வாக அதிகாரி ஸ்ரீரேகா, காரியதரிசி என்.எம்.ஹெச்.கலைவாணி, ஆகியோர் தலைமையில் மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மாணவிகள் மதுரை மாநகரின் அழகிய தோற்றம், மற்றும் காபி ஷாப், வணிக வளாகங்கள், அட்டையால் செய்யப்பட்ட ரோபோ உள்ளிட்ட தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அரங்குகளை அமைத்திருந்தனர். அதை மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டு மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.