மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக் கடையில் கூட்டுறவு துறை சார்பில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சீனி மற்றும் 1 முழு நீளக் கரும்பு ஆகியவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஷ்வரி, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், முதுநிலை மண்டல மேலாளர் மோகன், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் சுதா முரளி உடன் இருந்தனர்.