மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள், நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் மயிலாடுதுறை தலைமை மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள 500 கிராம மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. அடிப்படை கட்டமைப்பு மற்றும் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசினால் மேம்படுத்தப்பட்டுள்ளதால், குறிப்பாக தாய்மார்களுக்கான தாய்மை, குழந்தை பேரு முன்பின் மருத்துவங்கள், எலும்பு முறிவு, விபத்துக்கள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்களால் சிறப்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் மிக அதிக அளவில் உள்ள மருத்துவ கழிவுகள் உருவாகின்றன.
மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு தனியான நிறுவனம் செயல்பட்டு அதனை சேகரித்து பிரித்து அகற்றி வருகிறார்கள். மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை பிரித்து அகற்றும் பணி தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் கட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் திறந்த நிலையில் நடைபெறுகிறது.இறந்தவர்களின் பிரேத பரிசோதனைக்காக, வருகின்றவர்கள் மற்றும் இக்குப்பைகளால் வீசும் துர்நாற்றம் பிரேத பரிசோதனை முடிந்து பிரேதங்களை எடுத்துச் செல்ல வரும் உறவினர்கள் மிகவும் முகம் சுளிப்பதுடன் துர்நாற்றத்தில் சில மணி நேரங்கள் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மிக முக்கியமான மருத்துவ கழிவுகள் குப்பைகளை அகற்றும் பணியை, மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத மறைவிடத்தில் செய்தால் நன்றாக இருக்கும். ஆகவே மருத்துவ சுகாதாரத்துறை இது குறித்து தனி கவனம் செலுத்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக குப்பைகளை பிரிப்பு பணிகளை மாற்று மறைவிடத்தில் மேற்கொள்ள சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.