மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சீர்காழி டார்கெட் லயன்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44 வது ஆண்டு விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது . முன்னதாக சீர்காழி, சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஒலிம்பிக் சுடரானது பள்ளியின் இயக்குனர் எஸ் வீராசாமி அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டு வீரர்களால் சீர்காழி மாநகர் வழியாக பள்ளிக்கு சிறப்பாக வந்தடைந்தது. பிறகு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டு விழாவிற்கு பள்ளியின் நிறுவனத் தலைவரும் தாளாளருமான என். மோகன்ராஜ் தலைமை வகிக்க, பள்ளியின் நிறுவன துணைத் தலைவர் ஆர். சட்டைநாதன் முன்னிலை வகிக்க, இவ் விழாவின் சிறப்பு விருந்தினராக சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும், உதவி தலைமை ஆசிரியருமான நல்லாசிரியர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து, பரிசுகள் வழங்கினார், பள்ளியின் செயலர் ஜி.ராமதுரை, பொருளாளர் பி. செந்தில்குமார் மற்றும் பள்ளியின் இயக்குனர் சி. டி.மீனா மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் பி . சாந்தகுமார் மற்றும் துணை முதல்வர் சி. உதயவசந்தன். மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்தனர். மேலும் விழாவில் ஏராளமான மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.