மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்
மதுரையைச் சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவருக்கு ஒரே ரத்த வகையான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறுநீரகம் கிடைக்காததால் மாற்று ரத்த பிரிவை கொண்ட நபரிடம் சிறுநீரகத்தை தானமாக பெற்று பொருத்தமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பாதிக்கப்பட்டவர் “ஓ” இரத்த வகையை சேர்ந்தவர். அவரது மனைவியோ “பி” ரத்த வகையை சேர்ந்தவர். அவரது மனைவியின் சிறுநீரத்தை பொருத்துவதற்கு மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
சிறுநீரக மாற்றத்திற்கு முன்பாக நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியின் அமைப்பை குறைக்க சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 18-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து டிசம்பர் 26-ம் தேதி கணவன், மனைவி இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.
இதுகுறித்து மருத்துவ சேவை இணை இயக்குனர் டாக்டர் பிரவீன்ராஜன் கூறியதாவது :- மதுரை அப்போலோ மருத்துவமனையில் மாறுபட்ட ரத்த பிரிவை உள்ளடக்கிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் நலமுடன் உள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது என கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர்கள் அருண்குமார், சங்கர்,சரவணன் அழகப்பன், ஸ்ரீதர்,சுப்பையா, அப்துல்காதர், இந்து, அய்யப்பன், விற்பனை பொது மேலாளர் மணிகண்டன், நிர்வாக துணை பொது மேலாளர் லாவண்யா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பூமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.