தஞ்சாவூரில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு இயற்கை விவசாயம் செய்வது குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் மாவட்ட தலைவராக ரமேஷ் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட அவருக்கு ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் இன்ஜினியர் மதுரை ஜெகதீஸ்வரன், சங்க செயலாளர் செல்லப்பாண்டி உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.